Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்…. இனி உர விற்பனையில் விதிமீறல் நடந்தால்?…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!!

விவசாயிகளுக்கான உரவிற்பனையில் விதி மீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரம், யூரியா 1,442 டன், பொட்டாஷ் 389 டன், காம்பளக்ஸ் 3,802 டன், டிஏபி 897 டன், எஸ்எஸ்பி 159 டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மானிய உரங்களானது அரசு நிர்ணயம் செய்து உள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்யவேண்டும்.

விவசாயிகளிடம் இருந்து ஆதார் பெற்று விற்பனை முனையகருவியில் கைரேகை பதிவுசெய்து, சாகுபடி செய்யப்படும் பயிருக்கு தேவைப்படும் உரங்கள் மட்டுமே வழங்க வேண்டும். இதில் விற்பனை செய்யப்பட்ட உரங்களுக்கு உரிய ரசீது வழங்கி, விவசாயிகளின் கையொப்பம் பெற்று பதிவேடுகள் பராமரிக்க வேண்டும். அவ்வாறு மானிய உரங்கள் விற்பனை செய்யும்போது சில உரவிற்பனையாளர்கள், விவசாயிகளின் விருப்பத்துக்கு மாறாக இதர இடுப்பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் சூழல் உருவாகிறது.

ஆகவே விவசாயிகள் கேட்கும் உரங்களை மட்டுமே வழங்க வேண்டும். இதர இடுப்பொருட்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. இதற்கிடையில் உரங்களின் விலை, இருப்பு விபரங்கள் தகவல் பலகையில் விவசாயிகள் அறிந்துகொள்ளும் அடிப்படையில் தினசரி குறிப்பிட வேண்டும். உரமூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள விலைக்கே விற்பனை செய்யவேண்டும். பிற மாநிலம் மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு எந்த காரணத்தை கொண்டும் உரங்கள் வழங்கக்கூடாது. உரகட்டுப்பாடு சட்டம் 1985-க்கு உட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். விதிமீறல்கள் கண்டறியப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |