Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே அலெர்ட்!… இனி இந்த தவறை செய்தால் சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

ரயிலில் பயணிக்கும்போது இந்தத் தவறை நீங்கள் செய்தால் அபராதம் மட்டுமின்றி சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அது என்னவென்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

விதிமுறை 

ரயிலில் பயணம் செய்யும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அவ்வாறு இத்தவறை யாரேனும் செய்து பிடிபட்டால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். ஆகவே ரயிலில் தீயை பரப்புவது (அல்லது) எளிதில் எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது என்பது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இதற்கு ஜெயில் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

இதற்கெல்லாம் தடை..

ரயில்வே பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் மண்ணெண்ணெய், காய்ந்த புல், அடுப்பு, பெட்ரோல், மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, பட்டாசு (அல்லது) தீயை பரப்பும் வேறு எதாவது பொருட்களை கொண்டு பயணிக்ககூடாது. ரயில் பயணிகளின் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற ரயில்வே நிர்வாகம் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறது. மேலும் தீ விபத்துக்களைக் கட்டுப்படுத்த ரயில்வே வகுத்து உள்ள திட்டத்தின் அடிப்படையில் ரயில் பயணத்தில் மட்டுமின்றி பிளாட்ஃபார்ம் ஆகிய ரயில் வளாகத்திலும் பயணிகள் யாரும் புகை பிடிக்கக்கூடாது. அவ்வாறு யாரேனும் பிடிபட்டால் அவருக்கு 3 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதோடு, அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.

Categories

Tech |