இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஃபியா ‘ படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
தடம் மற்றும் சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் இப்படம் ‘மாஃபியா ‘. `துருவங்கள் பதினாறு‘ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.
இதன் டிரையல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் நடிகர் ரஜினியிடம் ஒருமுறை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேனை நடிகர் ரஜினி அழைத்துப் பாராட்டினார். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து திரை உலகிற்குவர தயாராக உள்ளது.
இப்படத்தை அடுத்த மாதம் பிப்ரவரி இருபத்தி ஒன்றாம் தேதி அன்றுவெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.