71 ஆவது குடியரசு தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இன்று 71-ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் போர் நினைவிடத்தில் நாட்டுக்காக உயிர் துறந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பிரதமர் மோடியுடன் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர். குடியரசு தினத்தில் தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி அமர்ஜவான் ஜோதியில் மட்டுமே மரியாதை செலுத்திவந்தார். இந்தமுறை இதனை மாற்றி டெல்லி அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்திய நிலையில் போர் நினைவிடத்தில் முதல் முறையாக மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
First time in history the Prime Minister paid homage to martyrs at the newly built National War Memorial instead of Amar Jawan Jyoti. #RepublicDay2020 #RepublicDay pic.twitter.com/slhUbWDLIA
— Sir Jadeja fan (@SirJadeja) January 26, 2020