Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பிரதமர் மோடி மாநிலம் போல…. தமிழகத்திலும் சூப்பர் சட்டம்…. அதிரடி காட்டிய திமுக அரசு…!!

துணைவேந்தர் நியமனம் மசோதா தாக்கல் தொடர்பாக பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் ஆளுநர்கள் இடம் இருந்தால் அது சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகும். பல்கலைக்கழக கல்வியில் மாநில அரசுகள் ஆர்வமாகவும்,  அக்கறையுடன் இருக்கும் சூழலில் ஆளுநரிடம் இதுபோன்ற அதிகாரம் இருக்கையில் மாநில அரசுக்கும் – ஆளுநருக்கும்  இடையே அதிகார மோதல் ஆகிவிடும் என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

இன்றைக்கு பிரதமராக இருக்கக்கூடிய மாண்புமிகு மோடி அவர்கள் அவருடைய சொந்த மாநிலம் குஜராத் மாநிலத்தில் தேரர்வு குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு துணை வேந்தராக நியமிக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா இதுபோன்ற மாநிலத்தில் தேர்வு குழு பரிந்துரை படக்கூடிய மூவரில் ஒருவர் துணைவேந்தராக மாநில அரசின் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார்  . பிரதமரின்  சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ளது போல  தமிழ்நாட்டிலும் செயல்படுத்தக்கூடிய சட்டங்களில் திருத்தம் செய்ய மசோதாவை இங்கே மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார்கள்  என ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |