Categories
பல்சுவை

மக்களே உங்க குடிநீர் சுத்தமா இருக்க…. இந்த 5 வாட்டர் பியூரிஃபையர்கள் யூஸ் பண்ணி பாருங்க…..!!!!!

குடிநீர் தூய்மையாக இல்லையெனில் பல உடல்நலப் பிரச்னைகளை நாம் சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் எதிர்பாராத பல்வேறு தொற்றுகள் பரவிவரும் இந்த சமயத்தில் நம் ஆரோக்கியத்தை நாம் பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியம் ஆகிறது. இதற்கிடையில் தண்ணீரை தூய்மைப்படுத்துவதற்கு நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் ஒரு சிறந்த வழி ஆகும். இதனால்  மலிவு விலையில் கிடைக்கக்கூடிய சிறந்த RO வாட்டர் ப்யூரிஃபையர் Best water purifier குறித்த தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம். இந்த வாட்டர் பியூரிஃபையர்களின் Best water purifier விலை மற்றும் அதன் அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

P&H Aqua Lake Water Purifier

இது 12 லிட்டர் அளவில் கிடைக்கக்கூடிய அக்வா வாட்டர் ப்யூரிஃபையர் ஆகும். மேலும் இது தண்ணீரில் உள்ள பாக்டீரியா, ஒட்டுண்ணிகள் மற்றும் கிருமிகளை 99 சதவீதம் வரை அகற்றும் திறனுடையது. அதுமட்டுமின்றி இந்த வாட்டர் பியூரிஃபையர் நீரின் சுவை மற்றும் வாசனையை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். இவற்றில் பின்னோக்கு சவ்வூடு பரவல் மற்றும் புறஊதா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு தண்ணீரில் உள்ள அழுக்குகள் தூய்மை செய்யப்படுகிறது.

Blue Star Aristo RO+UV+UF 7-Liter Water Purifier:

ப்ளூ ஸ்டார் அரிஸ்டோ RO+UV+UF வாட்டர் பியூரிஃபையர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குடும்பங்களுக்கு ஏற்ற 7 லிட்டர் நீர் சுத்திகரிப்பு இயந்திரமாகும். இவற்றில் அக்வா டெஸ்ட் பூஸ்டர் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செப்புசெறிவூட்டப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட கார்பனுடன் வருகிறது. இதில் நீங்கள் UV செயல் இழப்பு எச்சரிக்கை அறிவிப்பையும் பெறுவீர்கள். இது UV ஒளிமோசமாக இருக்கையில் உங்களை எச்சரிக்கும் blue star water purifier ஆகும். இது 3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட நீர் சுத்திகரிப்பாகும்.

Aquatec Plus – Epic 15L RO + UV + UF + TDS Water Purifier

இந்த அக்வாடெக் வாட்டர் ப்யூரிஃபையர் 15 லிட்டர் அளவிலான வாட்டர் ஃபில்டர் மல்டிஸ்டேஜ் ப்யூரிஃபிகேஷனுடன் வருகிறது. இது தண்ணீரிலுள்ள 99 சதவீத கன உலோகங்களை தூய்மை செய்ய முடியும். இந்த வாட்டர் ப்யூரிஃ பையரில் உள்ளமைக்கப்பட்ட TDS கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக நீங்கள் அதன் TDSஐ உங்களுக்கேற்ப சரிசெய்யலாம். இது தண்ணீரின் ரசாயன அசுத்தங்களையும் சுத்தப்படுத்த ஏதுவானதாகும்.

Kinsco Genuine Aqua Laser 15 Litre RO Water Purifier

இந்த 15-லிட்டர் அளவிலான RO வாட்டர் பியூரிஃபையர் வீட்டு உபயோகத்திற்கு ஏற்ற ஒன்றாகும். டெஸ்ட் அட்ஜஸ்டர் ஆகிய மேம்பட்ட தொழில்நுட்பம் இதற்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது உங்களுக்கு ஏற்றவாறு தண்ணீரின் சுவையை சரிசெய்ய உதவியாக இருக்கும். இந்த வாட்டர் பியூரிஃபையர் மிககுறைந்த மின்சார பயன்பாட்டில் தண்ணீரின் அனைத்து தீங்கு விளைவிக்கும் கூறுகளையும் தூய்மை செய்கிறது. மேலும் இது மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் உடனடியாக ஆர்டர் செய்யலாம்.

Addyz Fully Automatic RO+UV+UF Water Purifier:

இது முழுதானியங்கி RO+UV+UF வாட்டர் ப்யூரிஃபையர் ஆகும். மேலும் இது 4.5 நட்சத்திர பயனாளர் மதிப்பீட்டில் கருப்பு வண்ணத்தில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது. இவற்றில் 12 லிட்டர் கொள்ளளவு உடைய ஸ்டோரேஜ் டேங்க் இருக்கிறது. தண்ணீரை சுத்திகரிப்பதற்கு RO + UV + UF தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுஒரு முழு தானியங்கி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் என்பதால் சுத்தமான தண்ணீரை நீங்கள் பெற முடியும். அத்துடன் இது தேவையான கனிம அளவையும் பராமரித்து ஆரோக்கியமான தண்ணீரை வழங்குகிறது.

Categories

Tech |