குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்பாக்கம் அருகே நெய்குப்பி பகுதியில் பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் பில்டிங் காண்ட்ராக்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கோடீஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்களு ம், ஹரிஹரசுதன் மகனும் இருந்துள்ளனர். இவர்களுடைய மகனுக்கு ஆர்டிசம் என்ற நோய் இருந்ததால் வாய் பேசமுடியாமல் இருந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த கோடீஸ்வரி தனது மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.
அதன்பிறகு கோடீஸ்வரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் சந்தேக மரணத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.