Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான்: வெளியுறவுத்துறை அமைச்சர் யார்?…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சி மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதையடுத்து அந்த தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கான் அரசு கலைக்கப்பட்டது. அதன்பின் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்என்) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் 23வது பிரதமராக பதவியேற்று கொண்டார். இதில் ஷெபாஸ் அந்நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சியான மக்கள் கட்சி (பிபிபி) உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளார். இவற்றில் பிஎம்எல்என் சார்பாக 13, பிபிபி சார்பில் 9 பேர் உட்பட 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பி.பி.பி கட்சியினுடைய தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மகனுமான பிலாவல் புட்டோ சர்தாரி வெளியுறவு அமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் அமைச்சராக பதவியேற்கவில்லை. இதன் காரணமாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் அவருக்கும் இடையில் மறைமுக மோதல் போக்கு நிலவுவதாக பேச்சு அடிபட்டது. இதற்கிடையே லண்டனிலுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க பிலாவல் சென்றார். அப்போது அங்கு அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு இருக்கிறது. பிலாவலுடன் லண்டன் சென்ற பிபிபி கட்சியின் மூத்ததலைவரும், காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் விவகாரத்தில் பிரதமரின் ஆலோசகருமான உமர் ஜமான் கைரா, நவாஸ் ஷெரீப்புடன் பாகிஸ்தான் அரசியல் நிலவரம் தொடர்பாக பிலாவல் 2 முறை ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின் அவர் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியுறவு அமைச்சராக பதவியேற்பார் என தெரிவித்தார். முன்பாக தகவல் துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப், பிபிபி தலைவர் பிலாவல் லண்டனிலிருந்து பாகிஸ்தான் திரும்பிய பின் வெளியுறவு அமைச்சராக பதவியேற்பார் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராக வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மனைவி நஸ்ரத் ஷெபாஸ், மரியம் நவாஸ், முன்னாள் பிரதமர் ஷாகித் ககான் அபாசி, அவரது மகன் அப்துல்லா ககான், நிதி அமைச்சர் மிப்தா இஸ்மாயில் இடம்பெற்றிருந்தனர். இந்த தடையை நீக்குவதற்கு, புது அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த வகையில் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்ட நபர்களின் பட்டியலிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |