Categories
உலக செய்திகள்

ஜனவரி 26 …உலகில் பல்வேறு நாடுகளின் அரசு விழாக்கள்..!!

1947  ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று இருந்தாலும், இந்தியாவிற்கு என்று  நிரந்தர அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்தது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான், இந்த நாளை இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.இதேநாளில்  இந்தியா போன்று மேலும் பிற நாடுகளும் அரசு விழாக்களை  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவுகள் ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரிட்டிஷ் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூறும் விதமாக ஜனவரி 26ம் தேதியை ஆஸ்திரேலிய தினமாக நாட்டு மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் ஐரோப்பியர்கள் காலடி பதித்த நாட்களை பஸ்ட் லண்டிங் தே பவுண்டேஷன் டே என்றும் , அம்மக்கள் கொண்டாடினர். அது மட்டுமின்றி ரெக்கார்டு பிராக்ளாமேஷன் டே,  எம்பிறே டே என்று வெவ்வேறு நாட்களில் ஆஸ்திரேலியாவின் வெவ்வேறு மாநிலங்களில் அந்நாட்டின் தினத்தை கொண்டாடி வந்தனர்.

ஆனால் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து 1935 ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலிய தினம் கொண்டாடப்பட ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு ஆயிரத்து 1994 ஆம் ஆண்டில்தான் ஜனவரி 26-ஆம் நாள் நாடளாவிய வகையில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

முதலில் விடுதலையான குற்றவாளிகளின் கொண்டாட்டமாக தொடங்கி இப்போது ஆஸ்திரேலியாவின் அரசு கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டின் தினம் என்பதையும் தாண்டி ஜனவரி 26 ஆம் நாளை ஓர் அர்த்தம் நிறைந்த நாளாக கொண்டாடுகின்றனர் அந்நாட்டு மக்கள், இந்தியாவைப் போலவே மாநில அரசுகள் உள்ளூராட்சி மன்றங்கள், சமூக கொடுக்க ஏற்பாடு செய்யும் அரசு விழாக்களில் மக்கள் கலந்து கொள்கின்றனர்.

அது மட்டுமின்றி ஆஸ்திரேலியா தினத்தன்று சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெறுகிறார்கள். இதேபோல கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா குடியரசு தனது விடுதலை தினத்தை ஜனவரி 26 ஆம் தேதி அன்று கொண்டாடுகிறது.

1894 முதல் பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்த உகாண்டா 1962 இல் விடுதலை பெற்று சுதந்திர நாடு ஆனது.  1963இல் குடியரசானது , அனால் 1971ன்றில்  இடியமின் தலைவர்கள் ராணுவம் ஆட்சியைப் பிடித்தது.

1986 இல் நடந்த தேசிய எதிர்ப்பு இயக்கம் மூலமாக ராணுவ ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இந்த தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டாவின்  அரசியல் ஸ்திரத்தன்மை பாதுகாப்பு , சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்பட்டது. இதன் நினைவாகவே ஜனவரி 26ம் தேதியை உகாண்டாவின் விடுதலை நாளாக கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |