Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு எக்ஸ்ட்ரா 4 சலுகைகள்?…. என்னென்ன தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(DA) தொகை 3 % உயர்த்தப்பட்டதையடுத்து, அவர்களின் சம்பள உயர்வுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி உயர்வுக்குப் பின், மத்திய அரசு ஊழியர்களின் பல அலவன்ஸ்கள் அதிகரிக்கவுள்ளது. அந்த அடிப்படையில் DA உயர்வுடன் ஊழியர்களுக்குரிய பயணம் உதவித் தொகையும், வீட்டுவாடகை கொடுப்பனவு உதவித் தொகையும் அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனுடன் ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடையும் தானாகவே உயரும்.

உண்மையில் மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர பிஎஃப் மற்றும் பணிக்கொடை அடிப்படை சம்பளம் போன்றவை அகவிலைப்படியிலிருந்து கணக்கிடப்படுகிறது. இத்தகைய நிலையில் அகவிலைப்படி அதிகரிப்பால், பிஎஃப் மற்றும் கிராசுவிட்டி உயர்வது உறுதியாகி உள்ளது. மேலும் அகவிலைப்படி  அதிகரிப்பால் மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் பயணப்படி உயரும். இந்த உயர்வு 3 % வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. சென்ற மார்ச் 30 ஆம் தேதி அன்று மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு 3 % உயர்த்தியது.

இதனால் அவர்களின் அகவிலைப்படி 9 மாதங்களில் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இனிமேல் 34 % DA மற்றும் DR தொகை வழங்கப்படும். இந்த அறிவிப்பால் 50 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள். ஆனால் இந்த உயர்வு வாயிலாக அரசுக்கு வருடத்துக்கு ரூபாய் 9544.50 கோடி சுமை அதிகரிக்கும். இதனிடையில் 18 மாதகால DA நிலுவைத்தொகைக்காக மத்திய பணியாளர்கள் அமைப்பு அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |