கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (31), ஸ்ரீஜித் (25)இருவரும் கோவை மாவட்டம் அன்னூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இருவரும் இணைந்து அன்னூரை சேர்ந்த நண்பர் லூர்து சகாயராஜ் (26) என்பவரை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிள் வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது சக்தி சாலையில் உப்பு தோட்டம் என்ற பகுதி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த கழிப்பிட சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அதில் கிருஷ்ணசாமி மற்றும் ஸ்ரீஜித் இருவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டனர். ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர்கள் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதாலும் மதுபோதையில் வாகனம் ஓட்டியது விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் அதிவேகமாக வந்து கழிப்பிட சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது பதிவாகியுள்ளது. அந்தப் பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"அதிவேகம் ஆபத்தானது" கோவை மாவட்டம் அன்னூரில் மதுபோதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கழிப்பிட சுவர் மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு.@gurusamymathi @kovaikarthee @wilson__thomas @kirubakaranR1 @vijay_vast @gurujourno @akaasi@PrasanthV_93#Coimbatore #cctv pic.twitter.com/1mR2Kz4uN1
— Srini Subramaniyam (@Srinietv2) April 25, 2022