Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்… துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்… டிஜிபி உத்தரவு…!!!

துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை நிர்வாக வசதிக்காக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி பி.கணேஷ் என்பவர் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர்  திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உதயசூரியன் என்பவர் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர்  கிருஷ்ணகிரி மாவட்ட குற்ற ஆவணங்கள் காப்பகப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாலாஜி என்பவர் தூத்துக்குடி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிலையில், அவர் தஞ்சை மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதைப்போல தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். அதன்படி ரேனியஸ் ஜேசுபாதம் என்பவர் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர்  தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்பின் ஸ்டீபன் ஜோஸ் என்பவர் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் தூத்துக்குடி முறப்பநாடு காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராகவும், ஜெயந்தி என்பவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகவும், கடலோர பாதுகாப்பு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த ராமலட்சுமி என்பவர் தூத்துக்குடி காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், அவர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மணிமாறன் என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர்  தூத்துக்குடி தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டராகவும், ரகுராஜன் என்பவர் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில், அவர் குலசேகரப்பட்டினம் இன்ஸ்பெக்டராகவும், சுதேசன் என்பவர் தக்கலை இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த நிலையில், அவர்  தூத்துக்குடி மாவட்ட பசுவந்தனை இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |