Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி….!! மேக்ரோனுக்கு புதின் வாழ்த்துக்கள்….!!

பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 10ஆம் தேதி மற்றும் 24ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் தீவிரமான மையக்கருத்து கொள்கையைக் கொண்ட இமானுவேல் மேக்ரோன் 58.55 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம் அவர் கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்நிலையில் இமானுவேல் மேக்ரோனுக்கு ரஷ்ய அதிபர் புதின் டெலிகிராம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் இமானுவேல் மேக்ரோன் நல்ல உடல் நலத்துடன் நலவாழ்வு மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் செழித்தோங்க வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |