பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையை கொண்ட மரீன் லெபென்னை தோற்கடித்து இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மற்றும் மரீன் லெபென் உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மேக்ரான் 27.8 சதவிகித வாக்குகளும், மரீன் லெபென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றிருக்கின்றனர். அந்த நாட்டு சட்டப்படி அதிபராக தேர்வு செய்யப்படுபவர் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று இருக்க வேண்டும்.
ஆனால் 10ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் இரு இடங்களைப் பிடித்த தற்போதைய அதிபர் இம்மானுவேல் மற்றும் தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட மரீன் லெபெனுக்கும் இடையே இறுதி கட்ட வாக்குப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் இம்மானுவேல் மேக்ரான் 57.4 சதவீத வாக்குகளைப் பெற்று தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட மரீன் லெபென்னை தோற்கடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரான்ஸின் அதிபராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்ட எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள். இந்தியா – பிரான்ஸ் உறவை வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.