மனைவிடம் சொல்லாமல் வெளிநாட்டிற்கு சென்று திரும்பி வராத கணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் நவீன்நிஷா(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சிந்தாமணி பூசாரி தெருவை சேர்ந்த மகேஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான 10 நாட்களில் மகேஸ்வரன் மனைவியிடம் சொல்லாமல் திடீரென வெளிநாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனையறிந்த நவீன்நிஷா அவரது பெற்றோரிடம் கேட்டபோது சில நாட்களில் மகேஸ்வரன் வந்து விடுவார் என கூறியுள்ளனர். ஆனால் 6 ஆண்டுகள் ஆகியும் வெளிநாட்டிற்கு சென்ற மகேஸ்வரன் மீண்டும் ஊருக்கு திரும்பவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நவீன்நிஷா ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மகேஸ்வரன், அவரது பெற்றோர்களான ராமராஜ், ருக்மணி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.