Categories
மாநில செய்திகள்

8 முதல் 14 குழந்தைகளுக்கு….. கோடை கால அஞ்சல் தலை சேகரிப்பு முகாம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

குழந்தைகள் மத்தியில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் மூலம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால் தலை சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் இணைய வழியிலான கோடைகால முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மே இரண்டாம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 12.45  மணி வரை ஐந்து பிரிவுகளில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு இம்மாதம் 25 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் 30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

8 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 250 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்தி இதில் பங்கு கொள்ளலாம். பதிவு கட்டணத்தை காசோலையாகவோ அல்லது வரைவோலையாக தலைமை தபால் அதிகாரி, அண்ணா சாலை, தபால் நிலையம், சென்னை 600002 என்ற பெயரில் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |