Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அதிகாரிகளின் அதிரடி ஆய்வு”…. குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட் வகைகள் பறிமுதல்…. விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சாக்லேட்டுகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாக்லேட் விற்பனை நிலையங்களில் சோதனை செய்யுமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான குழு மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது குழந்தைகள் அதிகம் சாப்பிடும் சாக்லேட்டுகள், மிட்டாய் வகைகள், ஊசி போடும் சிரஞ்சில் விற்பனை செய்யப்பட்ட சாக்லேட்டுகள் போன்ற பல்வேறு விதமான சாக்லேட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை நிறமூட்டிகள் இருக்கின்றதா  என்பதை சோதனை செய்வதற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகத்தில் இருந்த அறிக்கை வந்த பிறகு சம்பந்தப்பட்ட கடைகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு ஐஸ் டியூப், பாட்டில்கள், குளிர்பான பாக்கெட்டுகள், துரித தின்பண்டங்கள், ஜெல்லி மிட்டாய்கள், உணவு விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகளில் உரிய தேதி குறிப்பிடப்படாத பண்டங்கள், சிரஞ்ச் சாக்லேட்டுகள், சிகரெட் மிட்டாய்கள் போன்றவற்றை விற்பனை செய்வதை விற்பனையாளர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்கள் தவிர்க்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Categories

Tech |