Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எனது கணவர் மீது நடவடிக்கைக எடுக்கனும்” குழந்தைகளுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

2-வது திருமணம் செய்து கொண்ட கணவரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நச்சலூர் பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன்களான கதிர்செல்வன், மித்ரன் அவர்களுடன் குளித்தலை காந்திசிலை அருகில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பிரியதர்ஷினி கூறியதாவது, தனக்கும் வெந்தம்பட்டி பகுதியில் வசிக்கும் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு என்னை அடித்து துன்புறுத்தி வந்தார்.

இதற்கு எனது மாமனார் மருதை, மாமியார் நவமணி ஆகியோர் எனது கணவருக்கு சாதகமாகப் பேசி எனது தந்தையின் வீட்டில் நகை, பணம், இருசக்கர வாகனம் வாங்கி தந்தால் மட்டுமே என் மகனுடன் வாழலாம் இல்லையெனில் எனது மகனுக்கு 2-வது திருமணம் செய்து வைத்து விடுவோம் என கூறி விவாகரத்து தர வேண்டும் என எனது கணவரை விட்டு விலக கொடுமைப்படுத்தினர்.

இது குறித்து நான் கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். இந்நிலையில் எனது கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது இரண்டாவது மனைவியான மகாலட்சுமி என்பவருக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

எனவே என்னையும் எனது குழந்தையையும் அனாதையாக விட்டுவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மணிகண்டனை கைது செய்து திருமணத்திற்கு துணை நின்ற எனது மாமனார், மாமியார், கணவரின் தம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எனது கணவர் வீட்டில் குடும்பத்துடன் வாழ்வதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன், தந்தை மருதை, தாயார் நாகமணி, மணிகண்டனின் சகோதரர் ராஜா, மணிகண்டன் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |