பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இலவசமாக பிரசாதம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறுபடை வீடுகளில் 3-ஆம் படை வீடாக விளங்கும் முருகப் பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் இணை இயக்குனர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக 40 கிராம் பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள விற்பனை நிலையங்களில் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் தமிழகத்தில் அமைந்துள்ள அனைத்து கோவில்களிலும் பிரசாதம் இலவசமாக வழங்குவது என்பது வரவேற்புக்கு உரியது. ஏனென்றால் கடைகளில் காசு கொடுத்து வாங்கும் பிரசாதத்தை விட கோவில்களில் வாங்கும் பிரசாதத்தை தான் பக்தர்கள் அதிகமாக விரும்புகிறார்கள். இதனையடுத்து திருப்பதிக்கு அடுத்தபடியாக பழனிக்கு தான் அதிகமான பக்தர்கள் வருகிறார்கள். இதனால் திருப்பதியில் லட்டு இலவசமாக பிரசாதமாக வழங்கப்படுவது போல் பழனியில் இலவசமாக பிரசாதம் பஞ்சாபிரதம் வழங்கப்பட வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. எனவே பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி என தெரிவித்துள்ளனர்.