அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து இரண்டாவதாக தாக்குதல் மேற்கொள்ள ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக ரகசிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் வருடத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் பயணிகளின் விமானங்களை கடத்தியதோடு, நியூயார்க்கில் இருக்கும் இரட்டை கோபுரம் மற்றும் வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆகிய இடங்களின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 3000 நபர்கள் கொலை செய்யப்பட்டனர்.
இதன் பின்னணியில் இருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன் பத்து வருடங்களுக்கு பின் அமெரிக்க படைகளால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பின் இரண்டாவதாக தாக்குதல் மேற்கொள்ள ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட நெல்லி லகோத் என்ற இஸ்லாமிய பெண் பண்டிதர் தெரிவித்திருப்பதாவது, செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு இரண்டாவதாக தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அதாவது விமானத்தின் வழி தாக்குதல் மேற்கொள்வது மிகவும் சிரமம் எனில் அமெரிக்க ரயில்வே மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பின்லேடன் சிவில் இன்ஜினியரிங் படித்திருக்கிறார். எனவே அமெரிக்க நாட்டின் மீது எவ்வாறு குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டியிருக்கிறார். அதன்படி ரயில்வே தண்டவாளத்தில் 12 மீட்டருக்கு வெட்டி எடுக்குமாறு கூறியிருக்கிறார். எனவே, ரயில் தடம் மாறி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்று பின்லேடன் திட்டமிட்டிருக்கிறார்.
அதற்காக கம்ப்ரஸர்களையும்,இரும்பு கருவிகளையும் பயன்படுத்துமாறு கூறியிருக்கிறார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரால் அந்த திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் போனது என்று கூறியிருக்கிறார்.