குடியரசு தினத்தின் வரலாறு மற்றும் கடந்து வந்த பாதை:
சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் அன்று ஆட்சி புரிந்த காங்கிரஸ் இயக்கம் பல காலங்களாக ஆங்கிலேயர்களிடம் சிக்கித் தவித்த காங்கிரஸ், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டு தனது சுய ஆட்சி உரிமையை வேண்டுமென கேட்டு உள்ளனர்.
இதையடுத்து இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமையின் காரணமாக, இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் முழுமையாக வெளியேற வேண்டும்.
அப்பொழுதுதான் எங்களுக்கு ‘பூரண சுயராஜ்ஜியம்’ கிடைக்கும். இந்திய சுதந்திரப் போரின் இலக்கும் அதுதான், எனவே 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான மாநாட்டில் முதல் முறையாக தெரிவித்துள்ளனர்.
இதன் தொடர்பாக மகாத்மா காந்தி அவர்கள், இந்தியர்களை சுதந்திர தினத்தை கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்ற இந்திய மக்கள் 1930ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி அன்று தங்களின் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் 1947ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15ஆம் தேதி அன்று, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். இந்தியாவின் சுதந்திர தினம் 17 ஆண்டுகள் கழித்து, ஜனவரி 26 ம் தேதியிலிருந்து, ஆகஸ்டு 15ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இருந்தாலும் ஜனவரி 26ஆம் தேதி அதனுடைய சிறப்பு தண்மையை இழந்து விட கூடாது என்ற நோக்கத்தில், அப்போதைய தேசத் தலைவர்கள் ஆசை பட்டனர். 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் எழுதி முடித்தார்.
இந்திய அரசியல் அமைப்பை 1950ஆம் ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதியில் அமல்படுத்துவதன் மூலமாக, ஜனவரி 26ஆம் தேதி சட்டபூர்வ அங்கீகாரம் கொடுப்பதற்காக, நவம்பர் 26ஆம் தேதி ஜவஹர்லால் நேரு தலைமையில் அமைச்சரவை முடிவு செய்தது. இதன் அடிப்படையில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமாக மாற்றப்பட்டது.
இந்தியாவில் அரசியல் அமைப்பு அமலுக்கு வந்த நாள் தான், குடியரசுதினமாக கூறினாலும. வரலாற்றுப் பார்வையில் ஜனவரி 26ஆம் தேதிதான், இந்தியாவின் முதல் சுதந்திர தினம் ஆகும்.