பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.இந்த மழை பவானி 56.6,வரட்டுப்பள்ளம் 22,கோபிசெட்டிபாளையம் 19,மொடக்குறிச்சி 19,கவுந்தப்பாடி 18.4,பெருந்துறை18,குண்டேரிப்பள்ளம்16.4,ஈரோடு,15,எலந்தைகுட்டை 12.8,அம்மாபேட்டை 11.6,கொடிவேரி 8.2,பவானிசாகர் 6.4,சென்னிமலை 6,சத்தியமங்கலம் 5தாளவாடி1.2, என மொத்தம் 108 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் வ.உ .சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை சேறும், சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.