ரபிளீசியா ஆர்னொல்டா மலர் உலகத்திலேயே மிக பெரிய அழகான பூ. இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் இது காணப்படுகிறது. ரபிளீசியா ஆர்னொல்டா மலர் ஒன்றின் எடை 8 கிலோ வரை இருக்குமாம். இதையடுத்து குறுக்களவு 3 அடி ஆகும். மகரந்தத் தண்டுகளையும், தேன் பையையும் தாங்கும் மையப்பகுதியின் குறுக்களவு 30 செ.மீ ஆகும். இந்தப் பூவின் இதழ் 60 மில்லி மீற்றர் தடிமன் உடையது. இந்த பூவின் நடுவேயுள்ள கிண்ணம் போன்ற குழியில் 10 லீற்றர் நீரை ஊற்றி வைத்திருக்க முடியும்.
இந்த மலர் விரிந்து இருநாட்களில் கருகிவிடும். மேலும் இந்த பூ ஒட்டுண்ணி ரகத்தினைச் சேர்ந்ததால் அதற்கென்று தனியாக இலை, தண்டு கிடையாது. பிற தாவரங்களில் ஒட்டிக்கொண்டு வளர்கிறது. நீரையும் பிற சத்துக்களையும் ஒட்டி இருக்கும் தாவரத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது. இவ்வாறு அழகாக இருக்கும் இந்தப் பூவின் பக்கத்தில் போக முடியாது. ஏனென்றால் இந்த பூவின் பக்கத்தில் போனால் அழுகிப்போன இறைச்சியில் இருந்தும், அழுகிப்போன மீனில் இருந்தும் வரும் வாசம் தான் வரும்.