Categories
பல்சுவை

காதல் மனைவியின் பிரிவு…. 2000 கிலோமீட்டரை கடந்து இந்தியாவுக்குப் பயணம்…. விசா இல்லாததால் கைது….!!!!

தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கிட்டத்தட்ட 2000 கிலோ மீட்டர் கடல் கடந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒருவர் முயற்சி செய்துள்ளார். அவருடைய பெயர் Ho Hoang Hung (வயது 35). இவர் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர். Ho Hoang Hung-ன் மனைவி மும்பையில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக Ho Hoang Hung-ஆல் அவருடைய மனைவியை பார்க்க முடியவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான Ho Hoang Hung ஒரு படகில் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீரும், உணவும் எடுத்துக்கொண்டு வியட்நாமில் இருந்து பேங்காக் சென்றிருக்கிறார். ஆனால் தாய்லாந்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். ஏனென்றால் இந்தியாவிற்குள் விசா இல்லாமல் நுழைய முடியாது. இந்த விஷயம் Ho Hoang Hung காவல்துறையினரிடம் மாட்டியதற்கு பிறகே தெரிய வந்துள்ளது. தன்னுடைய மனைவி மீது Ho Hoang Hung கொண்ட காதலால் அவர் எடுத்த முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |