Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்யும் மர்ம நபர்கள்”… போலீஸில் புகார் அளித்த நகுலின் மனைவி…!!!

தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆபாச படங்களை அனுப்பி மர்மநபர்கள் தொந்தரவு தருவதாக போலீசிடம் புகார் அளித்துள்ளார் நகுலின் மனைவி ஸ்ருதி.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகிற்கு அறிமுகமானார் நகுல். இத்திரைப்படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நகுல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார். நீண்ட காலமாக தனது தோழியாக இருந்த ஸ்ருதியை காதலித்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை தரும் மர்ம நபர்கள் பற்றி பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் ஸ்ருதி.

அவர் பதிவில் கூறியதாவது, ஆபாச வீடியோக்கள் உடன் ஐ லவ் யூ என அனுப்புகிறார்கள். எப்படி இந்த மாதிரி சில ஆண்கள் தெரியாத ஒரு பெண்ணிற்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி ஐ லவ் யூ என அனுப்ப முடியும். இப்படி வருவது முதல் முறை அல்ல பல முறை இதுபோல வந்திருக்கின்றது. ஆனால் சமூகத்தில் பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கம் குறித்தே அதிகமாக விவாதிக்கப்படுகின்றது என பதிவிட்டு தனது  கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரின் இந்த பதிவிற்கு இணையதள வாசிகள் பலர் ஆதரவு தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் தனக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் மர்ம நபர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஸ்ருதி.

Categories

Tech |