நம் வீட்டில் பல்லி இறந்து கிடந்தால் அதை உடனடியாக அகற்றி விடுவோம். ஆனால் ஒரு பெண் தண்ணீரில் விழுந்த பல்லியின் உயிரை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு காப்பாற்றியுள்ளார்.
நம்முடைய வீட்டில் பொதுவாக ஒரு பல்லி இறந்து கிடந்தால் அதை அகற்றி விட்டு சாதாரணமாக அடுத்த வேலையை பார்ப்போம். ஆனால் ஒரு பெண் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஒரு பல்லியின் உயிரை காப்பாற்றுவதற்காக நீண்ட நேரமாகப் போராடியுள்ளார். அதாவது அந்தப் பெண் தண்ணீர் தொட்டியில் விழுந்த பல்லியை மீட்டு அதனுடைய வயிற்றுப் பகுதியில் நீண்ட நேரமாக அமுக்கியுள்ளார். அந்தப் பெண்ணின் நண்பர் பல்லி இறந்து விட்டதாக கூறி அதை அகற்றி விட்டு அடுத்த வேலையைப் பார்க்குமாறு கூறியுள்ளார்.
இருப்பினும் அந்தப் பெண் கேட்காமல் பல்லியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீண்ட நேரமாக வயிற்றுப் பகுதியிலும், மார்புப் பகுதியிலும் அமுக்கியுள்ளார். அவருடைய நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு பல்லிக்கு மீண்டும் உயிர் வந்தது. இதனால் அந்த பெண் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் நாம் செய்யும் சாதாரணமான செயல் ஒரு உயிரை காப்பாற்றும் என்றால் அந்த செயலை செய்வதில் தவறில்லை என்பது இதிலிருந்து தெரிய வந்துள்ளது.