தனுசு ராசி அன்பர்களே..!
இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும்.
வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து விஷயமாக சில பிரச்சினைகள் எழக்கூடும்.
புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது கவனம் வேண்டும். எந்தவொரு விஷயத்தையும் ஆலோசித்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் கருத்துக்கு மாற்று கருத்து தெரிவிக்க வேண்டாம். அனைவரையும் அனுசரித்துச் சென்றால் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். கடன் பிரச்சினைகள் அவ்வப்போது தலைதூக்கும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். காதலில் உள்ளார்கள் பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்.