Categories
பல்சுவை

OMG!! மிஸ்டர் ஆசியா, மிஸ்டர் இந்தியா இன்னும் எத்தனை…. தமிழகத்தின் பாடிபில்டர்…. இவரை உங்களுக்கு தெரியுமா?….!!!

தமிழகத்தை சேர்ந்த ஒருவர்  பாடி பில்டிங் போட்டியில் பலமுறை பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நாம் அனைவருக்கும் பொதுவாக பாடிபில்டிங் என்று சொன்னவுடன் ஞாபகத்தில் வருவது ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தான். ஆனால் நம் இந்திய நாட்டை சேர்ந்த அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பலமுறை பாடிபில்டிங் போட்டியில் பதக்கம் வென்றது எத்தனை பேருக்கு தெரியும். சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரமணி என்பவர் 14 முறை மிஸ்டர் இந்தியா, 12 முறை மிஸ்டர் சர்வீஸஸ், மிஸ்டர் இந்தியா சாம்பியன்ஷிப் ஆஃப் சாம்பியன்ஸ் 4 முறை, மிஸ்டர் ஆசியா 3 முறை, மிஸ்டர் வேர்ல்டு 4 முறை வென்றுள்ளார்.

இவ்வளவு அற்புதமான சாதனைகளைப் படைத்த ராஜேந்திரமணியைப் பற்றி பலருக்கும் தெரியாது. இதற்கு முக்கிய காரணம் ராஜேந்திரமணி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் உதவி செய்வதற்காக ஒருவர் கூட முன்வரவில்லை என்பதை ஒரு பேட்டியில் ராஜேந்திரமணி கூறியுள்ளார். மேலும் பல துயரங்களை தாண்டி சாதனை படைத்த ராஜேந்திரமணி தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். தமிழனாக இருப்பதில் தலை நிமிர்ந்து நிற்கிறேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |