குஜராத்தை சேர்ந்த 75 வயது உடைய பகவான்ஜி என்பவர் பறவைகளுக்காக ஒரு பிரம்மாண்ட பறவை இல்லத்தில் உருவாக்க நினைத்தார். இதற்காக பகவான்ஜி தனது நிலத்தை பயன்படுத்தினார். இந்நிலையில் 20 லட்ச ரூபாய் செலவில் 60 அடி, அகலம் 40 அடி உயரம், 140 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட பறவை இல்லத்தை பகவான்ஜி உருவாக்கினார். இந்த பறவை இல்லம் தீங்கு விளைவிக்கும் வானிலையில் பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதிபடுத்தும் வகையில் பறவைகளுக்காக அமைக்கப்பட்டது ஆகும். இந்நிலையில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மண்பானைகளை கொண்டு இந்த பறவை இல்லம் ஆற்றங்கரையோரத்தில் கட்டப்பட்டுள்ளது. இயற்கையை நேசிக்கும் பகவான்ஜி அனைத்து உயிரினங்களையும் சமமாக நடத்த வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்.
Categories