US-ல் வசிக்கும் அலெக்சாண்டர் என்பவர் ஒரு கடையில் இருந்து சுமார் 10 வருடங்களாக பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். ஆனால் திடீரென ஒருநாள் அந்த நபர் பீட்சா ஆர்டர் செய்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் டாமினோஸில் வேலை பார்க்கும் அனைவரும் அலெக்சாண்டர் விடுமுறை காரணமாக வெளியூருக்கு சென்று விட்டதாக நினைத்தனர். ஆனால் பல வாரங்கள் ஆகியும் அலெக்சாண்டர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இதனால் டாமினோஸ் கடைக்காரர் அலெக்சாண்டரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் டாமினோஸ் கடைக்காரர் தன்னிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரை அலெக்சாண்டரின் வீட்டிற்கு அனுப்பி என்ன நடக்கிறது என்பதை பார்த்து வருமாறு கூறினார். அதன்படி ஊழியர் அங்கு சென்று பார்த்த போது அலெக்ஸாண்டர் தரையில் விழுந்து சுருண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது அலெக்சாண்டரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஒரு நாள் தாமதமாக வந்தால் இவர் உயிர் பிழைத்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளனர். அதன்பின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அலெக்சாண்டர் குணமடைந்தார். இதனையடுத்து டாமினோஸில் வேலைபார்த்த அனைத்து ஊழியர்களும் பூங்கொத்துடன் அலெக்சாண்டரின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தனர்.