Categories
உலக செய்திகள்

Twitter: “எப்போதும் விட சிறந்ததாக்க விரும்புகிறேன்”…. எலான் மஸ்க் சொல்வது என்ன?….!!!!!

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்க உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 % பங்குகளையும் வாங்க முன்வந்தார். இதையடுத்து டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு அந்நிறுவனம் சம்மதித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த ஒப்பந்தமானது இறுதியானது. ஏற்கனவே டுவிட்டரின் 9 சதவீத பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ள சூழ்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தன் முதல் டுவீட்டை அவர் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது “எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன். ஏனென்றால் அதுதான் பேச்சு சுதந்திரம்” என்று பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பதிவிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில் “சுதந்திரமான பேச்சு என்பது  செயல்பாட்டில் இருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். மனித குலத்தின் எதிர்காலத்திற்கான முக்கிய விஷயங்கள் டுவிட்டரில் விவாதிக்கப்படுகிறது.

புது அம்சங்களுடன் டுவிட்டரை மேம்படுத்துவதன் வாயிலாக டுவிட்டரை எப்போதும் விட சிறந்ததாக ஆக்க விரும்புகிறேன். டுவிட்டரில் வைரஸ் தாக்குதல்களை நிறுத்துவதன் வாயிலாகவும், எல்லா மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும்  டுவிட்டரை  சிறந்ததாக்க விரும்புகிறேன். இதனிடையில் டுவிட்டரில்  மிகப்பெரிய ஆற்றல் இருக்கிறது. அதனை வெளிக் கொண்டுவர இந்த நிறுவனத்துடனும் அதன் பயனர்களின் சமூகத்துடனும் இணைந்து பணிபுரிய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |