இலங்கையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியிருக்கிறார்.
இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே தன் வரலாற்றுக் கால அனுபவங்களை வைத்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான பிரார்த்தனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கொழும்பு நகரின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் கடந்த 2019-ஆம் வருடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உயிர்தப்பிய நபர்களின் குடும்பத்தினர் உட்பட இத்தாலி நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த 3500 கத்தோலிக்கர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி அன்று இலங்கையில் ஈஸ்டர் பண்டிகைக்கான பிரார்த்தனை நடந்தபோது தொடர்ந்து குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் 270 மக்கள் உயிரிழந்தனர். மேலும், 500 பேருக்கு காயம் ஏற்பட்டது. மூன்று தேவாலயங்களும் மூன்று நட்சத்திர விடுதிகளும் பலமாக சேதமடைந்தது. இதற்கான பின்னணியை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார்.