Categories
உலகசெய்திகள்

பல் மருத்துவர்களே…! குஷியோ குஷி… இதோ உங்களுக்காக உருவாக்கப்பட்ட “குழந்தை ரோபோ”…. எவ்ளோ ரூபாய்னு தெரியுமா?….!!

ஜப்பானில் இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள குழந்தை ரோபோ ஒன்றை பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக உருவாக்கியுள்ளார்கள்.

ஜப்பானில் பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பிடியாராய்டு என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை ரோபோவை உருவாக்கியுள்ளார்கள்.

இந்த ரோபோ மருத்துவர்கள் குழந்தைகளுக்கு பல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களிடமிருந்து வரும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது இதய செயலிழப்பு மற்றும் வலிப்பு குறித்து இந்த ரோபோ கண்டறிந்து வெளிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |