Categories
மாநில செய்திகள்

ஜூன் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, கைம்பெண் மறுமண நிதி, உதவி மகளிர் சுய உதவி குழுக்கள், பெரியார் சமத்துவபுரம் திட்டம் தந்தவர் கருணாநிதி. மகளிருக்கும் சொத்துகளில் உரிமை, உழவர்களுக்கு இலவச மின்சாரம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. வி.பி சிங் குஜ்ரால் வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரதமர் களால் பாராட்டப்பட்டவர் கலைஞர்.

60 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற கருணாநிதி தமிழ்நாட்டை ஐந்துமுறை ஆண்டவர். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத கலைஞரின் மறைவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன என்றார்.

மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்றும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் (ஜூன் 3ஆம் தேதி) இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Categories

Tech |