Categories
உலக செய்திகள்

பட்டினி போட்டு கொல்ல திட்டமா….? உக்ரைன் மக்களை வதைக்கும் ரஷ்யா….!!!

ரஷ்யா உக்ரைன் நாட்டு மக்களுக்கு உணவு தண்ணீர் கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்வதாக கூறப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டில் இருக்கும் உணவு விநியோகத்தை ரஷ்ய படையினர் கடந்த வாரத்தில் குறிவைத்திருந்ததாக Luhansk அலுவலர்கள் கூறியிருந்தார்கள். மேலும், Sievierodonetsk என்னும் நகரத்தில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு சந்தைகள், கடைகள், உணவு சேமிப்பகங்கள் என்று அனைத்தையும் சேதப்படுத்தினார்கள்.

ஒரு லட்சம் மக்கள் வசித்த அந்த நகரத்தில் தற்போது 17,000 மக்கள் தான் உள்ளார்கள். அந்த மக்களும் உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் தற்போது மின் உற்பத்தி மையங்கள் மற்றும் தண்ணீர் குழாய்களை நோக்கி தாக்குதல் மேற்கொள்ள தொடங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

போர்க்களத்தில் நியாயமாக போர் மேற்கொள்வது போல் தங்களை காண்பித்துக் கொள்ளும் ரஷ்யா மறைமுகமாக இவ்வாறு உணவு மற்றும் தண்ணீரை நாசமாக்கி மக்களை பட்டினி போட்டு கொலை செய்ய முயன்று வருகிறது என்று Luhansk ஆளுநர் Serhiy Haidai கூறியிருக்கிறார். தண்ணீர் இல்லையெனில் மக்கள் நீரிழப்பு நோய் ஏற்பட்டு உயிரிழப்பார்கள். ரஷ்யா மேற்கொள்வது போர்குற்றங்கள் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |