Categories
சினிமா

கடைசில இப்படி சொல்லிட்டாங்களே…. திருமணத்தை பற்றி பேசிய ரம்யா பாண்டியன்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் தனது திருமணத்தைப் பற்றி ரசிகர்களிடம் உரையாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார்.

இதனை தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் கடந்த ஆண்டு OTT யில் வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதற்கிடையில் இணையதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பண்டியன் சமீபத்தில் ரசிகர்களுடன் பேசினார். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு சற்றும் யோசிக்காத ரம்யா பாண்டியன் “நான் முதலில் ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கும் என்னைப் பிடிக்க வேண்டும். இன்னும் நான் அப்படி யாரையும் கண்டு பிடிக்கவில்லை. அதனால் எனக்கு இப்போதைக்கு திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை” என்று கூறியுள்ளார். மேலும் தற்போது ரம்யா பாண்டியன் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |