உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் குறித்து ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
உக்ரைன் நாட்டில் இரவு நேரத்தில் சுமார் 423 இடங்களில் ரஷ்ய படை தாக்குதல் மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் 26 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உக்ரைன் நாட்டுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, மேற்கு உலக நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு உதவி செய்வது நீடிக்கும் பட்சத்தில், மூன்றாம் உலகப்போருக்கான உண்மையான ஆபத்து இப்போது உள்ளது என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் நல்ல எண்ணத்திற்கு வரம்புகள் இருக்கிறது.
பரஸ்பரமாக அது இருக்க வேண்டும். இல்லையெனில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதில் எந்த பயனும் இல்லை. அமைதியான வழியில் செல்வதற்கு தான் ரஷ்யா விரும்புகிறது என்று கூறியிருக்கிறார்.