Categories
உலகசெய்திகள்

மதுபான கடைக்கு சர்ப்ரைஸ் வருகை தந்த கங்காரு…. வைரலாகும் வீடியோ…!!!!!

ஆஸ்திரேலியாவில் மதுபான கடை ஒன்றில் திடீரென கங்காரு  நுழையும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட  விலங்கு கங்காரு. அவை ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காகும். எனவே பொது இடங்களில் மக்கள் மத்தியில் கங்காருக்கள் வருகை புரிவது அங்கு இயல்பானதாகும். ஆனால், இது கொஞ்சம் புதிதானது. அதாவது கங்காரு மதுபானக் கடைக்கு வருகை புரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு அழையா விருந்தாளியாக கங்காரு ஒன்று வருகை புரிந்ததுள்ளது.

வாடிக்கையாளர் வரிசையில் நின்று கொண்டிருக்க, கங்காரு உள்ளே நுழைந்து அமைதியாகச் செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அந்த கங்காருவை எந்த தொந்தரவும் செய்யாததால், அது அமைதியாக கடையை விட்டு வெளியேறியுள்ளது. இந்த வீடியோ தற்போது “australian.animals” இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “Unexpected Visitor” என்ற தலைப்பிட்டு பகிரப்பட்டுள்ளது. மேலும் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |