ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் உக்ரைனின் முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் இருந்து கொத்துக்கொத்தாக மீட்கப்பட்ட பிணங்கள் தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ரஷ்ய படைகள், பெண்களை கொலை செய்து அவர்களை கொடூரமாக கற்பழித்திருப்பது தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய வீரர்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு பல உடல்களை சிதைத்திருக்கின்றனர். அதேபோல் சிலரின் தலையும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.