Categories
மாநில செய்திகள்

காலி பாட்டில்களை திரும்ப கொடுங்க….. ரூ.10 வாங்கிட்டு போங்க….. தமிழக அரசு போட்ட சூப்பர் திட்டம்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களின் விலையை 10 ரூபாய் உயர்த்தி, பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் திரும்பி வழங்கப்படும் என்ற திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் மதுபாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு பலரும் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனவிலங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதைத் தடுக்க தவறினால் மலைவாசஸ்தலம் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்றம் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை போன்ற இடங்களிலும், சரணாலய பகுதிகளிலும், தேசிய பூங்கா போன்ற இடங்களிலும் ஜூன் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்துவது குறித்து ஜூன் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |