Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. கழுத்தை அறுத்து “தொழிலதிபர் படுகொலை” பின்னணி என்ன?

தொழில் அதிபரை  கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்பட்டி பகுதியில் தொழிலதிபரான முகமது  நிஜாம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆயிஷா பீவி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு முகமது நிஜாம் அதே பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து முகமது நிஜாம் வீட்டின் முன்பக்க வராண்டாவில் உட்கார்ந்துகொண்டு செல்போனை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த   3 மர்ம நபர்கள் முகமது நிஜாமின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர் .

இதில் படுகாயம் அடைந்த  முகமது  நிஜாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ஆயிஷா பீவியின் கை, கால்களை கட்டி போட்டு விட்டு லாக்கரில் இருந்த 170 பவுன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து ஆயிஷா பீவி செல்போன் முலம்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆயிஷா பீவியை  காப்பாற்றியுள்ளனர்.

மேலும் உயிரிழந்த முகமது நிஜாமின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் நிஷாபார்த்திபன்  குற்றவாளிகளை கண்டுபிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், அருள்மொழி அரசு, சிவசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தனிப்படை காவல்துறையினர் தொழில் போட்டியில் இந்த கொலை நடந்ததா? அல்லது நகைக்காக முகமது நிஜாம் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |