Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர்…. சாலையில் விழுந்த மின் கம்பங்கள் …. பெரும் பரபரப்பு….!!!

மின் கம்பிகள் மீது டிராக்டர் உரசியதால் மின் தடை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கரும்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கரும்பு ஆலைக்கு தினந்தோறும் ஏராளமான லாரி மற்றும்  டிராக்டர்களில் கரும்பு பாரம் ஏற்றி வருவது வழக்கம்.அதேபோல் நேற்று குமாரபாளையத்தில் உள்ள காவிரி நகர் பகுதியில் டிராக்டர் ஒன்று கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. அப்போது திடீரென டிராக்டர் சாலையின் குறுக்கே தொங்கியபடி இருந்த மின் கம்பம்  மீது உரசி உள்ளது.

இதில் மூன்று மின் கம்பங்கள் சாலையில்  சாய்ந்து  விழுந்துள்ளது. இதனால் கிழக்கு காவிரி, மேற்கு  காவிரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பம் நடும்  பணியில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |