Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கு… கொடிவேரி அணையில் தண்ணீர் திறப்பு…!!!

கொடிவேரி அணையில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், கோபி அருகில் கொடிவேரி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்ற நிலையில், இதன் மூலம் 24, 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடந்தோறும் ஏப்ரல் 14ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்சமயம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் பராமரிக்கும் பணிகள், அறுவடை பணிகள்  நடைபெற்று வந்த பொழுதில் தண்ணீர் திறந்து விடபடாமலே  இருந்துள்ளது.

இந்நிலையில் பணிகள் நிறைவு பெற்றது. இதனை அடுத்து பத்து தினங்களுக்குப் பிறகு நேற்று தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி கொடிவேரி அணையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோபி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி பங்கேற்று மதகை இயக்கி வைத்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.அப்போது வாய்க்காலில் தண்ணீர் சீறி பாய்ந்து ஓடியது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறையினர், விவசாய சங்கத்தினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என நிறைய பேர் பங்கேற்றனர்.  இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, (நேற்று)25 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்தனர்

Categories

Tech |