டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை தொழில் நடைமுறைகள் தொடர்பான ஆவணங்களை வழங்க நியூயார்க் நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதில் முதலில் 3 தேதியும் பின்பு 30ம்தேதி வரையும் அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கொடுத்து அவகாசத்தில் ட்ரம்ப்தரப்பில் ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை ட்ரம்ப் அவமதித்ததாக கூறி தினமும் பத்தாயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் கூறுகையில் “ட்ரம்ப் மீது போடப்பட்டுள்ள இந்த அவதாரம் அவரை தண்டிப்பதற்காக அல்ல. அவர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்பதற்காகவே விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரம்ப் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வார் என்று எதிர்பார்ப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.