Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையின் ஓரம் கேட்பாரற்ற நிலையில் – சிவலிங்கம்..!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் சிவலிங்கம்:

பராமரிப்பு இல்லாமல் இருந்த  சோழர்கால சிவலிங்கத்தை மீட்டு  பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அகல படுத்தும் பணியின் போது குளக்கரையை   ஓட்டி சாலையின் ஒதுக்குப்புறமாக சிவலிங்கம் ஒன்று இருந்தது.

சிவலிங்கம் ஆனது மழையில் நனைந்தபடி மண்மூடி கேட்பாரற்று சாலையோரத்தில் இருந்து உள்ளது. வேதனை அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.  இந்த இடத்தை சீரமைத்து பொதுமக்கள் வழிபட , வசதிகளை செய்து தருமாறு சிவனடியார்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |