கல்லூரி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செம்மங்காலவிளை கிராமத்தில் அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.பி.ஏ பட்டதாரியான அஜித் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் அஜித் மற்றும் தக்கலை பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆகிய இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்நிலையில் அஜித் மற்றும் அந்த மாணவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் அஜித்தின் நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் மாணவி அஜித்தை விட்டு சென்றார்.
இதனால் கோபமடைந்த அஜித் மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.