ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த எல் சால்வடார் நாட்டின் அதிபர் நயிக் புகேலே அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
எல் சால்வடார் நாட்டில் ரவுடிகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வரும் நிலையில் ரவுடி கும்பல்களை கட்டுப்படுத்த அவசரநிலை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த மாதம் ஒரே நாளில் பொதுமக்களில் 62 பேர் இந்த கும்பலால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் அவசர நிலையை அறிவித்த அந்நாட்டு அதிபர் நயிப் புகேலே அரசு 16 ஆயிரத்துக்கும் அதிகமான ரவுடிகளை கைது செய்துள்ளது. மேலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடையும் தகவல் பரிமாற்றத்தின் போது கட்டுப்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பொது மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிப்பதாக ஒரு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.