Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வீட்டை காலி பண்ண சொன்னது தப்பா?…. வாடகைக்கு இருந்த வாலிபரின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலிஸ் ….!!!!

வாடகைக்கு இருந்த நபர்  வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி இந்திரா நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டை ஹரிஹரசுதன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரசுதன் வீட்டு வாடகை சரியாக கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யுமாறு செந்தில்குமார் ஹரிஹரசுதனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து  நேற்று வீட்டை காலி செய்த ஹரிஹரசுதன் பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி செந்தில்குமார் வசித்து வரும் வீட்டின் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்நிலையில் செந்தில்குமாரின்  வீடு  தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த   குடும்பத்தினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஹரசுதனை  கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்

Categories

Tech |