Categories
உலக செய்திகள்

பருவகால மாற்றங்கள்…. 2030-க்குள் வருடந்தோறும் 560 பேரழிவுகள் உண்டாகும்… ஐ.நா. எச்சரிக்கை…!!!

பருவ கால மாற்றங்களை கவனிக்கவில்லையெனில் 2030ஆம் வருடத்திற்குள் ஒவ்வொரு வருடமும் 560 பேரழிவுகளும் உண்டாக்கும் என்று ஐநா கடுமையாக எச்சரித்திருக்கிறது.

விஞ்ஞானிகள் பூமியின் வெப்பநிலை அதிகமாகி, பனிப்பாறைகள் உருகுவதால் உண்டாகும் பருவகால மாற்றம் பேரழிவுகளை உண்டாக்குகிறது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். எனினும் அதனை யாரும் பெரிதாக கண்டு கொள்வதாக தெரியவில்லை.

எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான அளவை எட்டும் விதத்தில் வெப்பநிலை உயர்வு ஏற்படும் அதனை தவிர்க்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் கடந்த 2018 ஆம் வருடத்தில் ஐ நா பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டிருக்கிறது.

அதில் தொழிற்சாலைகள், வாகனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், விவசாயம் போன்றவற்றின் மூலமாக வெளியாகக் கூடிய பூமியை வெப்பமாக்கும் வாயுக்களை வரும் 2030ஆம் வருடத்திற்குள் பாதி அளவாக குறைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஐநா அமைப்பு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில் வரும் வருடங்களில் பூமி முன்பிருந்ததை விட அதிக பேரழிவுகளை சந்திக்க வேண்டிய ஆபத்தான நிலையில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் பருவ கால மாற்றங்களை கவனிக்கவில்லையெனில் வரும் 2030-ஆம் வருடத்திற்குள் ஒவ்வொரு வருடமும் 560 என்ற அளவில் பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பருவகால மாற்றம், கால நிலை குறித்த ஆபத்துக்களின் அளவு, அதிர்வெண், கால அளவு அதன் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து அதிகரிக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், இதனால் உலகளவில் உயிரினங்களுக்கும் அவற்றின் வாழ்வியல் முறையிலும் அதிக  பாதிப்பு, அழிவுகள் ஏற்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |