சாலையில் சென்ற லாரி திடீரென கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.பி.அக்ரஹாரம் செல்லும் சாலையில் விறகு பாரம் ஏற்றிக்கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது . இந்த விபத்தில் கோவிந்தராஜன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேலும் லாரியில் இருந்த அனைத்து விறகுகளும் சாலையில் சிதறி உள்ளது.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அகற்றியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.